நீயும் ஒரு குழந்தை தான் மடி மீது சாய்கையில் நீயும் ஒரு கவிதை தான் நான் உன்னை ரசிக்கையில் நீயும் என் இதயம் தான் நான் நிமிடத்திற்கு ஒரு முறை துடிக்கையில் ...
துயரம் என்று தலைசாய்க்க இவள் தோள்கள் இருக்கையில் துண்டில் மீனாய் துவள்வது ஏன்? கண்ணீரால் கண் பேச இவள் கரம் நீட்டி அதை துடைக்க காயங்கள் மருந்திடு சோகங்கள் மறந்திடு...
நீரோடை போல் இவள் மனம் எங்கோ செல்ல கடலாய் நீயே சிறை எடுத்தாய் விரிந்திடும் என் சிறகுகளுக்கு காற்றாய் உயிர் கொடுத்து பறக்க செய்தாய் பூக்களை மொய்த்த வண்டுகளாய் உன் வண்ணங்களை சுவடாய் பதித்தாய் என் மனதில்..
என்னில் விழும் கோபகனலுக்கு உன் மௌனத்தை விடையகாதே கனலை ஏற்கும் என் இதயம் மௌனம் மட்டும் ஏற்க மறுக்கிறது..
பன்னிரு வருடத்தில் பூக்கும் குறிஞ்சியாய் என் வாழ்வில் நீ சோகங்களில் தலை சாய்த்தேன் உன் தோளில் ராணங்கள் பல மறைந்தன உன் பேச்சில் யாவும் நீ ஆனாய் என் வாழ்வில் அன்பின் மொழியாய் பண்பின் உறைவிடமாய் என்னுள் நின்றாயே தாயுமானவனே!!! உன் இணையில்லா அன்பில் தஞ்சமிட அனுமதிப்பாயா??? என் அன்பே !!!