Tuesday, April 19, 2011

அழகிய சோலையில் கூவிடும் குயிலும்
மலர்களின் இடையே ரிங்கமிடும் வண்டும்
தொடுவானம் துவங்கி கரை தொடும் அலையும்
ஏழுசுரம் சேர்த்து இயற்றிய இசையும்
என்னவளின் கரம் தொட்டு விளையாடும்
வளையலேசையில் மறந்து போனதே!!!!!!
##இந்து##

Friday, April 1, 2011

முழு நிலவின் சயலோ
இவள் முகம்
குளிர்ந்திடும் பௌர்ணமி
இவள் சிரிப்பு
மயிலின் தோகையே
இவள் கூந்தல்
ரோஜாவின் இதழே
இவள் செவ்விதழ்
மௌனமே மொழியாய்
இவள் பேச்சு
பிரம்மன் படைத்த
காவியமாய் மண்ணில் இவள் !!!!!!